இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு ஐ.சி.எஃப்.ஆர்.இ ) என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம். இந்திய அரசின் இந்த நிறுவனம் தேராதூனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் செயல்பாடுகளாக வனவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை இந்திய மாநிலங்களுக்கும் பிற பயனர் நிறுவனங்களுக்குப் பயன்படுத்த மாற்றவும், மற்றும் வனவியல் கல்வியை வழங்குவது ஆகும். இக்குழுமத்தின் கீழ் 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 மேம்பட்ட மையங்கள் உள்ளன. இவை பல்வேறு உயிர்-புவியியல் பகுதிகளின் ஆராய்ச்சி தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்த மையங்கள் தேராதூன், சிம்லா, ராஞ்சி, ஜோர்ஹாட், ஜபல்பூர், ஜோத்பூர், பெங்களூர், கோவை, அலகாபாத், சிந்த்வாரா, ஐஸ்வால், ஹைதராபாத் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் உள்ளன.